Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Nov 19, 2019

"ஒருநாள் தலைமை ஆசிரியர்" - குழந்தைகள் தினத்தையொட்டி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த அரசுப்பள்ளி மாணவி



பந்தலூர் அருகே அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் நேற்று ஒருநாள் பள்ளியை நிர்வாகம் செய்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த முக்கட்டி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.



அதிரடி உத்தரவுகள்

குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாகவும் செயல்பட்டனர். இதில் 8ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். காலை இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, தினமும் திருக்குறள், பழமொழி உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியராக செயல்பட்ட தர்ஷினி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.



அதில் அனைத்து பள்ளி மாணவர்களும்  தினமும் மாலை 3.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும், மாணவர்களோடு ஆசிரியர்களும் விளையாட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் மாணவர்களாக இருந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவருக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் எட்டாம் வகுப்பு மாணவி ஐஸ்வரியா ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தினார். மாணவர்களாக இருந்த ஆசிரியர்கள் மாணவி கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்து அசத்தினர்.

No comments:

Post a Comment