Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Dec 3, 2019

பொடுகை நிரந்தரமாக போக்க இந்த சின்ன விஷத்தை செய்ங்க


பொடுகுத் தொல்லை எல்லாருக்குமே தீராத தொல்லையாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தூக்கி கொண்டையோ அல்லது அலங்காரமோ செய்தால் பொடுகு அப்பட்டமாக தெரிந்து விடும். குளிர்காலத்தில் சொல்லவே வேண்டாம். தலை அரிப்பு, முடி உதிர்தல் சேர்ந்து கொள்ளும்.



முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணம் பொடுகுதான். பொடுகைப் போக்க ஷாம்பு உபயோகித்தும் பார்த்தாயிற்று. எல்லாவித குறிப்புகளும் பயன்ப்படுத்தியாச்சு.

ஆனால் அப்போதைக்கு பலன் தந்தாலும், மறுபடியும் வந்துவிட்டதே என கவலைத் தொற்றிக் கொள்வது பலருக்கும் நடப்பதுண்டு. அப்படி நிரந்தரமாக பொடுகைப் போக்க பல மூலிகைகள் உதவுகிறது. அவற்றை சரியான விகிதத்தில் தவறாமல் பயன்படுத்தினால் பொடுகை முற்றிலும் போக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.

வெங்காயம் :
சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும். பொடுகு தங்காது. சுத்தமாக மறைந்துவிடும்.



கடலை மாவு :
கடலை மாவு 2 ஸ்பூன் எடுத்து அதில் அரை மூடி எலுமிச்சை சாறு கால் கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவேண்டும். இப்படி செய்தால் பொடுகு மாயமாகிவிடும். முடியும் நன்றாக வளரும்.

வினிகர் :
ஏதாவது ஒரு வினிகரை 2 ஸ்பூன் எளவு எடுத்து ஒர் கப் நீரில் கலந்து தலைமுடிக்கு தேயுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவினால் பொடுகு போயே போச்சு. வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு உங்கல் பக்கம் கூட எட்டிப்பார்க்காது.

வேப்பம்பூ :
காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

அருகம்புல் :
அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.



வால்மிளகு :
வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.

கற்பூரம் :
கற்பூரத்தை பொடி செய்து லேசான சூடு இருக்கும் தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடிக்கு தேய்க்கவும். தமைமுடியின் வேர்க்கால்களில் நன்ராக படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு மருந்துக்கும் இருக்காது. சுத்தமான தலைமுடி மிளிரும்.

வசம்பு
வசம்பு பவுடரை 1ஸ்பூன் அளவு எடுத்து அதனை சூடான தேங்காய் எண்ணெயில் கலந்து சில நிமிடம் காய்ச்சுங்கள். பின்னர் அந்த எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசவும்.

நீலகிரி தைலம் :
நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துண்டை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு தலைமுடியை அலச வேண்டும். இது பொடுகை விரட்டும். கிருமித் தொற்றையும் போக்கும்.

கற்றாழை :
எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் சேர்த்து ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.



இஞ்சிச் சாறு
இஞ்சி சாறு எடுத்து அதனுடன் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொண்டு, அந்த பசையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின் தலைமுடியை நன்றாக அலசுங்கள். இதனை தொடர்ச்சியாக 4-5 நாட்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சமையல் சோடா :
சமையல் சோடா சிறந்த தீர்வாக பொடுகிற்கு உதவுகிறது. சமையல் சோடாவை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து அடஹ்னை தலைமுடியில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். நல்ல பலன் தரும்

No comments:

Post a Comment