Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Dec 22, 2019

முதன்முறையாக ஒவ்வொரு கோயில்களில் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்த அரசு உத்தரவு



அறநிலையத்துறை சார்பில் முதன்முறையாக ஒவ்வொரு கோயில்களில்  மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்த வேண்டும் என்று கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அதில், இந்தாண்டும் மார்கழி இசைத்திருவிழா (பாவை விழா) சிறப்புற நடத்தி ஏதுவாக திருப்பாவை, திருவெம்பாவை பண்ணொடு பாட மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து பின் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். 

ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தலைப்பு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று  மாணவர்களை தேர்வு செய்து பரிசுகள் கோயில் சார்பாக அளிக்கப்பட வேண்டும்.


 முதல் மூன்று பரிசுக்கு பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.1000 வழங்கப்பட வேண்டும். இந்தாண்டு சென்னை மண்டலத்தில் மாநில அளவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மார்கழி இசை திருவிழா நடத்தப்படவுள்ளது. 

இந்த போட்டி தேர்வு குழு ஒருங்கிணைப்பாளராக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் துணை  ஆணையர் நியமனம் செய்யப்படுகிறது. உதவியாக செயல் அலுவலர்கள் லட்சுமி காந்த பாரதிதாசன், சந்திரசேகரன், நற்சோனை, ராஜா இளம்பெருவழுதி, தேன்மோழி, பிரகாஷ் நியமிக்கப்படுகின்றனர்.


மேலும், மார்கழி மாதம் இறுதியில்  சென்னையில் மாநில அளவிலான இசை விழா போட்டி நடைபெறும் என்றும் இதில், மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவில் நான்கு பிரிவில் முதல் பரிசு வென்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட அளவில்  முதல் பரிசு வென்றவர்களைமாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யும் வகையில் ஒரு பிரிவிற்கு ஒருவர் வீதம் மூன்று பிரிவிற்கு மூன்று நபர்களை தேர்வு செய்து அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment