Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Jan 1, 2020

2020... 'லீப்' ஆண்டு எப்படி?

ஆங்கில புத்தாண்டு (2020) இன்று பிறந்து உள்ளது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.


ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1 இருந்தது. கி.மு.,45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் 'ஜூலியன் காலண்டர்' அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் இடம்பெற்றன. ஜன.,1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச.,25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு தேதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.




உலக நாடுகள் ஏற்பு:

பின், 'ஜூலியன் காலண்டரில்' உள்ள, 'லீப் இயர்' கணக்கீடுகளை சரி செய்து செம்மைப்படுத்தினார் ரோமை சேர்ந்த போப் கிரிகோரி. 1582ல், 'கிரிகோரியன் காலண்டரை' அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஆகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள், ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது. ஜன.,1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன. 1752 வரை, பிரிட்டன் இக்காலண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை. சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும், 'கிரிகோரியன் காலண்டரை' அடிப்படையாகக் கொண்டு ஜன.,1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன.




'லீப்' ஆண்டு எப்படி?

2020 ஒரு 'லீப்' ஆண்டு. இதன் பிப்ரவரியில் 29 நாட்கள் வரும். ஆண்டின் மொத்த நாட்கள் 366. பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365.25 நாட்களாகிறது. ஆண்டுதோறும் 365 நாட்கள் மட்டும் கணக்கிடப்படுகிறது. மீதமுள்ள 0.25 (கால்வாசி) நாள், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படுகிறது. இதனால் 28க்கு பதிலாக 29 தேதியாக மாறுகிறது.

No comments:

Post a Comment