Tamilnadu Teachers, Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Feb 20, 2020

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா? அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்?

இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நகர்ப் புறங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் பெறும்பாலனவர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளார்கள்.


அதுமட்டும் இல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூட இயலாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மேலும் பலர் வங்கி கணக்குகளை துவங்கி உள்ளனர். 




இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் நிர்வகித்து வருவதை நாம் பார்த்து இருப்போம். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.


ஏடிஎம்-ல் அதிகமாக பணம் எடுக்கலாம் 

ஒவ்வொரு சேமிப்பு கணக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுக்க கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் இரண்டு வங்கி கணக்குகளுடன் ஏடிஎம் இருக்கும் போது அதிக முறைகள் பணம் எடுக்க இயலும். அதுமட்டும் இல்லாமல் மூன்று மற்றும் 5 பரிவருத்தனைகளுக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் காடணம் பிடிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.   

கிளை பரிவர்த்தனைகள் 

பல சேமிப்பு கணக்குகளில் பணம் வைக்க, எடுக்க, காசோலை பரிவத்தனை செய்யவதற்கு எல்லாம் ஒரு வரம்பை மீறும் போது கட்டணங்கள் வசூலிப்பது உண்டு. இது போன்று கட்டணங்கள் செலுத்துவதில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை வைத்துள்ள போது தப்பிக்க இயலும். 

டெபிட் கார்டுகள் ஆஃபர் 

மின்னணு பரிவர்த்தனை, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்று சூழல் உறுவாகி வரும் நிலையில் டெபிட் கார்டுகளுக்கு பல நிறுவனங்கள் கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குகின்றனர். இப்படி கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கப்படும் நிலையில் உங்கள் செலவுகளை குறைக்க இயலும்.   


குறைந்த லாபம் 

சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச பணத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டும். இது 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு கணக்குகள் இருக்கம் விதி. சேமிப்பு கணக்குகளில் நீங்கள் இப்படிப் பணத்தை வைத்திருக்கும் போது ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வரை வட்டி பெறலாம். இதுவே இரண்டு கணக்குகள் இருக்கிறது என்றால் இரண்டிலும் நீங்கள் பணத்தை வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் வட்டி குறையும் வாய்ப்பு உண்டு.   

பராமரிப்பு கட்டணங்கள் 

உங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச அளவிலான பணத்தை வைக்கவில்லை என்றால் பராமரிப்பு கட்டணங்களாக 450 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வங்கிகளைப் பொருத்து செலுத்த நேரிடும். கார்டு கட்டணங்கள் சேமிப்பு கணக்குகளின் டெபிட் கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இரண்டு கார்டுகள் உள்ள போது 100 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை ஒரு கார்டுக்கான கட்டணம் என இரண்டிற்கும் செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment