Tamilnadu Teachers, Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Apr 30, 2020

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்:



எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்
State Bank Of India: குறுஞ்செய்தியிலேயே நீங்கள் இந்த வகை கடனை பெற தகுதியானவரா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். தகுதியான வாடிக்கையாளர்கள் கடனை 4 steps...


SBI Updates: உலகளாவிய தொற்றான கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக மக்களின் நிதி நிலைமை மிகவும் பாதிப்படைந்துள்ளது மேலும் பலவிதமான கஷ்டங்களையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன மேலும் வணிகத்தை மூடியுள்ளதால் சிறு வியாபாரிகளின் நிலைமை மோசமடைய துவங்கியுள்ளது. இதை மனதில் வைத்து பாரத ஸ்டேட் வங்கி குறைந்த வட்டியில் அவசர கடனை சிறு வியாபாரிகளுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் தவனையை ஆறு மாதங்களுக்கு கட்ட வேண்டாம் என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறைந்த வட்டியில் எஸ்பிஐ அவசர கடன்
கடனை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. கடன் தேவைப்படுவோர் வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் அதை பெற்றுக் கொள்ளலாம். மேலும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களிடம் Yono App ஐ பதிவிறக்கம் செய்து அதிலுள்ள சிறந்த நன்மைகளை பெறலாம் எனக் கூறியுள்ளது. தவனை கட்டுவது ஆறு மாதத்துக்கு பிறகு துவங்கும் மேலும் அது 7.25 சதவிகிதம் வட்டி என்ற அளவில் இருக்கும். இது எல்லா வகைக் கடன்களிலும் மிகவும் குறைந்த வட்டி விகிதம் என எஸ்பிஐ கூறியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தனிநபர் கடனை வெறும் 4 சொடுக்குகளில் பெறலாம்.
முன் ஒப்புதல் பெற்ற தனிநபர் கடனை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வெறும் 4 சொடுக்குகளில் பெறலாம் என மூத்த வங்கி பணியாளரான ராஜேந்திர அவஸ்தி கூறியுள்ளார். கடனுக்கான விண்ணப்பத்தை 7 நாட்களும் 24 மணி நேரமும் விண்ணப்பிக்கலாம். அவசர கடனைப் பெற வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL < வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் (last 4 digits of account number) > என தட்டச்சு செய்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். குறுஞ்செய்தியிலேயே நீங்கள் இந்த வகை கடனை பெற தகுதியானவரா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். தகுதியான வாடிக்கையாளர்கள் கடனை 4 steps களில் பெறுவார்கள்.
எஸ்பிஐ அவசர கடனை வாடிக்கையாளர்கள் எவ்வாறு உடனடியாகப் பெறமுடியும்.
முதல் படி (step) – State Bank Yono app ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
இரண்டாம் படி – ஆப்பில் now என்பதைக் கிளிக் செய்யவும்.

மூன்றாம் படி – அடுத்து கால அளவு (time period) மற்றும் தொகையை (amount) தேர்வு செய்யவும்.
நான்காம் படி – பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு OTP வரும். பணம் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.

No comments:

Post a Comment