உண்டு! சூரியனிடமிருந்து வரும் ஒளியை சந்திரன் எதிரொளிக்கிறது. சந்திரனிடமிருந்து வரும் ஒளி , காற்று மண்டலத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் சிறுசிறு துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இதனால் இரவு வானம் , வெளிச்சமாகத் தோன்றுகிறது.
மேகத்தில் சிறுசிறு துகள்களாக தூசுகளும் புகையும் ( கரி , சாம்பல் ) நீர்த்துளிகளும் இருக்கின்றன. இந்தத் துகள்களின் பருமனுக்கும் ஒளி சிதறடிக்கப்படும் கோணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. பெரிய துகள் குறைந்த கோணத்திலும் சிறிய துகள் அதிகக் கோணத்திலும் ஒளியைச் சிதறடிக்கும். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சிதறடிக்கும் துகள்கள் , சந்திரனைச் சுற்றி , ஒரு வட்டத்தில் அமையும்.
வட்டம் சிறியதாகத் தெரிந்தால் பெரிய துகள்கள் இருக்கின்றன என்றும் , வட்டம் பெரியதாக இருந்தால் சிறிய துகள்கள் இருக்கின்றன என்றும் பொருள்.
வட்டம் ஏதும் தெரியவில்லையென்றால், மேகத்திலுள்ள துகள்கள் வெவ்வேறான எல்லாவித பருமன்களிலும் இருக்கின்றன எனக் கொள்ளலாம். துகள்களின் பருமனுக்கும் மழை உண்டாவதற்கும் தொடர்பு உண்டு. சிறிய வட்டமாக இருந்தால், கூடிய விரைவில் மழை பெய்யும் எனப் பொருள் கொள்ளலாம்.
No comments:
Post a Comment