Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

May 15, 2020

சிறுநீரக கற்களை கரைக்க வீட்டு வைத்தியம்!



சிறுநீரகம் உடலில் இருக்கும் உப்புசத்தை வடிகட்டி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியே அனுப்பும் போது உப்பும் வேதிப்பொருளும் அதிலிருந்து வெளியேறுகிறது.

உப்பு முழுமையாக வெளியேறாமல் சிறு துகளாக மாறி சிறுநீரகத்தில் தேங்கி, கற்களாக படிந்துவிடுகிறது. சிறு சிறு கற்களாக இருந்தால் அவை கரைந்து வெளியே எறிவிடும்.

ஆனால் கல் பெரிதாக வளர்ந்துவிட்டால் சிறுநீர்க்குழாயில் அடைத்து விடும். இதனால் சிலருக்கு சிறுநீரகப்பையில் வந்து தங்கி பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

கல் பெரியதாக இருந்தால் வீட்டு வைத்திய முறை குணமாக்காது. ஆனால் ஆரம்ப அறிகுறியாக இருந்தால் வீட்டு வைத்தியம் மூலம் சிறுநீரகக்கல்லை கரைத்து வெளியேற்றிவிடலாம்.

கல் கரைக்க எப்படி வீட்டு வைத்தியம் செய்யலாம் என்று பார்ப்போம்:


  • சிறுநீரகக் கற்கள் வந்திருப்பதாக உணர்ந்தால் தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.
  • தண்ணீருக்கு மாற்றாக இளநீர் குடிக்கலாம்.
  • தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது சிறுநீரும் கூடுதலாக உப்புத்துகளோடு வெளியேறிவிடும்.
  • எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன், தேன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், வெங்காயத்தை நறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கலக்கி தினமும் குடிக்க வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து உமிழ்நீரோடு கலந்து குடித்து வர வேண்டும். இப்படி செய்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும்.
  • வாழைத்தண்டை சாறாக்கி சிட்டிகை மிளகுத்தூள், உப்பு கலந்து குடித்து வந்தால் சிறுநீரககல் கரையும். வாரத்துக்கு மூன்று நாள் மட்டும் எடுத்து கொண்டால் போதும்.
  • வாழை மரத்தை வெட்டிய பிறகு அடிமரத்தை உள்ளங்கை அளவு பள்ளமாக்கி அதை மேலாக்க துணிகொண்டு மூடவேண்டும். 8 மணி நேரம் கழித்து துணியை விலக்கினால் அந்த பள்ளத்தில் இலேசாக சாறு வடிந்திருக்கும். அதை குடித்து வந்தால் எப்பேர்பட்ட சிறுநீரக கல்லும் கரைந்து போகும்.
  • நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், சிட்ரிக் அமிலம் நிறைந்த பழச்சாறுகள், மாதுளைபழச்சாறு அதிகம் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும்.
  • சிறுநீரகங்களில் இருக்கும் தாது உப்பு மற்றும் யூரிக் அமிலத்தை சமநிலையில் வைக்க துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து குடித்து வரலாம்.
  • துளசி இலை இல்லாதவர்கள் துளசி பொடியை வாங்கி தேனில் குழைத்து சாப்பிடலாம். சீறுநீரக கற்களை கரையும்.
  • உணவில் உப்பை குறைக்க வேண்டும்.
  • காரம், மசாலா. புளி உணவுகளை போதுமான அளவு தவிர்க்க வேண்டும்.
  • கால்சியம் அதிகமிருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • யூரிக் அமிலம் அதிகமிருக்கும் உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.
  • சிட்ரேட் அளவையும் குறைக்க வேண்டும்.
  • பதப்படுத்தபட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட தயாரிப்புகள், காபி,டீ,சோடாபானங்கள், ஐஸ்க்ரீம் வகைகள் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

No comments:

Post a Comment